2, 9-ந் தேதிகளில் மதுபான கடைகள் மூடப்படும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி, மிலாடி நபியையொட்டி2, 9-ந் தேதிகளில் மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி, மிலாடி நபியையொட்டி 2, 9-ந் தேதிகளில் மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திபக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் வருகிற 2, 9-ந் தேதிகளில் காந்தி ஜெயந்தி, மிலாடி நபியை முன்னிட்டு மூடி வைக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் மது கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மது கூட உரிமை தாருங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.