சாராயம் கடத்திய மினி லாரி பறிமுதல்


சாராயம் கடத்திய மினி லாரி பறிமுதல்
x

சாராயம் கடத்திய மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

சாராயம் கடத்திய மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாணியம்பாடி வழியாக மினி லாரியில் சாராயம் கடத்துவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், வாணியம்பாடி டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் அம்பலூர் சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் வாணியம்பாடியை அடுத்த தும்பேரி கூட்ரோட்டில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் சாராயம் காய்ச்சுவதற்கான கருவேலம் பட்டை, சாராய மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் மினி லாரியுடன் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மினி லாரியை ஓட்டிவந்த தும்பேரியை சேர்ந்த டிரைவர் தேவகுமார் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய தேவராஜ்புரத்தை சேர்ந்த அண்ணாமலை, பாலகிருஷ்ணன் ஆகிேயாரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story