ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்


ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வானரமுட்டியில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடந்தது.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் கயத்தாறு யூனியன் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி பருவம் முகாம் 3 நாட்கள் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமிற்கு நிறுவன முதல்வர் கோல்டாகிரேனா தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பயிற்சியை தொடங்கி வைத்தார். விரிவுரையாளர் மல்லிகா ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். இதில் நூறு ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.


Next Story