இலக்கிய மன்ற விழா


இலக்கிய மன்ற விழா
x

திசையன்விளை மனோ கல்லூரியில் இலக்கிய மன்ற விழா நடந்தது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. பேராசிரியர் பெனட் வரவேற்றார். கற்றலும் கற்பித்தலும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. மானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் ஜேக்கப் சாமுவேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதை தொடர்ந்து இலக்கிய மன்ற விழா நடந்தது. இதையொட்டி பேச்சு போட்டி, நினைவாற்றல், புகைப்படம் கண்டறிதல் நாடக காட்சி, வார்த்தை விளையாட்டு உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பேராசிரியர்கள் தமிழ்செல்வி, ஜெயஸ்ரீ, மகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story