சிறுமி தீக்குளிப்பு


சிறுமி தீக்குளிப்பு
x

சிறுமி தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சண்முகசுந்தரம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கவுசல்யா சிங்கம்புணரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

இவர்களது 10 வயது மூத்த மகள் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று மாலை அண்ணாநகர் பகுதியில் உள்ள வீட்டின் அருகில் அவர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து எஸ்.வி.மங்களம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story