பொங்கலையொட்டி அந்தியூர் சந்தையில் கால்நடைகளுக்கான அலங்கார கயிறுகள் விற்பனை மும்முரம்


பொங்கலையொட்டி அந்தியூர் சந்தையில் கால்நடைகளுக்கான அலங்கார கயிறுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

ஈரோடு

அந்தியூர்

பொங்கலையொட்டி அந்தியூர் சந்தையில் கால்நடைகளுக்கான அலங்கார கயிறுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

அலங்கார பொருட்கள்

தைப்பொங்களுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கின்றன. அதனால் பொங்கல் பொருட்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பெரிய சந்தை கூடும். அந்தியூர் மட்டுமின்றி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் அந்தியூர் சந்தைக்கு வந்து மளிகை பொருட்கள் வாங்கி செல்வார்கள்.

இந்தநிலையில் தைப்பொங்கலையொட்டி நேற்று நடந்த சந்தையில் கால்நடைகளுக்கு கட்டும் அலங்கார பொருட்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தன.

களை கட்டியது

ஆடு, மாடுகளின் கொம்புகளுக்கு பூசும் வர்ணம், பல வண்ணங்களில் மூக்கணாங்கயிறு, தும்பு கயிறு, மணி, சங்கு, திருகாணி மற்றும் சாட்டைகள் விதவிதமாய் விற்பனைக்கு வந்திருந்தன.

கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படவில்லை.

இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் பண்டிகை இப்போதே களை கட்டியுள்ளது. அதனால் நேற்று அந்தியூர் சந்தையில் கால்நடைகள் வளர்ப்போர் ஆர்வமுடன் அலங்கார கயிறுகளை வாங்கி சென்றார்கள்.


Next Story