ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகளை விற்று பணம் கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு ரசீது


ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகளை விற்று பணம் கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு ரசீது
x

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகளை விற்று பணம் கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு ரசீது வழங்கப்படுகிறது.

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகளை விற்று பணம் கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு ரசீது வழங்கப்படுகிறது.

மாட்டுச்சந்தை

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை கூடி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு 50 கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு வந்தது. இது ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று வழக்கமான கூடிய சந்தைக்கு ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

300 பசு மாடுகள் மற்றும் 250 எருமை மாடுகள் என மொத்தம் 550 மாடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் எருமைமாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், பசுமாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையும் விற்பனையானது. தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற வெளிமாநில வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி மாடுகளை பிடித்து சென்றனர்.

ரசீது

இதுகுறித்து மாட்டுச்சந்தை நிர்வாகிகள் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடப்பதால், மாடுகளை வாங்க வருவோர், அதிக தொகையாக இருந்தால், வங்கியில் இருந்து பணம் எடுத்து வருவதற்கான ஆவணத்தை வைத்துள்ளனர். அல்லது, ஈரோடு மாட்டுச்சந்தை அருகே உள்ள ஏ.டி.எம்.களில் பணத்தை எடுத்து செலுத்துகின்றனர்.

மாட்டை விற்று பணம் வாங்கி செல்வோருக்கு, மாட்டுச்சந்தை சார்பில், எந்த ஊருக்கு அவர்கள் செல்கிறார்கள் என்ற விவரம், கொண்டு செல்லும் தொகையுடன் ரசீது வழங்குகிறோம். எனவே தேர்தல் பறக்கும் படையினரால் விவசாயிகளுக்கு பிரச்சினை இல்லை. சந்தைக்கு வந்த மாடுகளில் 80 சதவீத மாடுகள் விற்பனையானது.


Next Story