கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்
கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது
திருவாரூரை அடுத்த விஸ்வநாதபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் ஆன்சி அருள்நாதன், துணைத்தலைவர் அமலோற்பவ சேவியர் ஆகியோர் தலைமை தாங்கினர். திருவாரூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர், உதவி இயக்குனர் ஆகியோரின் உத்தரவின்படி செல்லூர் கால்நடை மருந்தகம் சார்பில் ஆடு, மாடுகளுக்கு குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, சினை ஊசி போடுதல், சிகிச்சை அளித்தல் தாது உப்பு கலவை வழங்குதல் ஆகியவை நடந்தது. மேலும் சிறப்பாக கால்நடை வளர்ப்போருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதேபோல் நாரணமங்கலம் ஊராட்சியிலும் முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் வளர்மதி சண்முகம் தலைமை தாங்கினார். இதில் செல்லூர் மற்றும் வடவேர் கால்நடை உதவி மருத்துவர் எம்.சுரேந்தர், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் க.செந்தில்குமார், அனிதா, செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை நடத்தினார்கள்.