அரசு மானியத்துடன் கால்நடைகளுக்கு காப்பீடு


அரசு மானியத்துடன் கால்நடைகளுக்கு காப்பீடு
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மானியத்துடன் கால்நடைகளுக்கு காப்பீடு வழங்கப்படும்.

ராணிப்பேட்டை

விவசாயிகள், கால்நடைகள் வளர்ப்போர்களுக்கு எதிர்பாராத விதமாக ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யும் பொருட்டு, கால்நடை பராமரிப்புத்துறையின் தேசிய கால்நடைகள் இயக்கம் 2022-23-ன்‌ படி கால்நடைகள் காப்பீடு செய்ய ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 850 அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் வறுமை கோட்டிற்கு கீழ்‌ உள்ளவர்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 70 சதவீதம் மானியத்திலும், வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் மானியத்திலும் கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்படும்.

பசுக்கள், எருமைகள் 2 வயது முதல் 8 வயது வரையிலும். ஆடுகள் 1 முதல் 3 வயது வரையிலும், பன்றிகள் 1 முதல் 5 வயது வரையிலும் காப்பீடு செய்யப்படும். ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 5 அலகுகள் வரை காப்பீடு செய்யப்படும்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story