அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமை தூக்கும் தொழிலாளி பலி


அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமை தூக்கும் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமை தூக்கும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமை தூக்கும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுமை தூக்கும் தொழிலாளி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகரம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி (வயது63). இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் பைபாஸ் சாலையில் வெடிக்கடை அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கருணாநிதி தலையில் பலத்த அடிபட்டு மயங்கி கிடந்தார்.

போலீசார் விசாரணை

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவருடைய மனைவி தமிழரசி பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story