அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
பெதப்பம்பட்டி பகுதியில் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

அதிக பாரம்
பெதப்பம்பட்டி, குடிமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாக கால்நடை வளர்ப்பும் நடைபெற்று வருகிறது. குடிமங்கலம் பகுதியில் மக்காச்சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுகிய கால பயிர், குறைந்த அளவு தண்ணீர், கூலி ஆட்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பி.ஏ.பி. பாசனம் மூலமாகவும், மானாவாரியாகவும் மக்காச்சோளம் சாகுபடியில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மக்காச்சோளம் கோழித்தீவனமாகவும், மக்கா சோளத்தட்டு கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. குடிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் தற்போது அறுவடை முடிவடையும் நிலையில் உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
மக்காச்சோள தட்டுகள் கால்நடை தீவனமாக பயன்படுவதால் மக்காச்சோள தட்டுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. மக்காச்சோள தட்டுகளை ஒரு சில விவசாயிகள் கால்நடைகளுக்காக விளைநிலங்களில் இருப்பு வைத்துள்ளனர். சில விவசாயிகள் மக்காச்சோள தட்டுகளை விற்பனை செய்வதால் கனரக வாகனங்களில் ஏற்றப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கிராமப்புறங்களில் மின்கம்பிகள் ஒரு சில பகுதிகளில் தாழ்வாக செல்லும் நிலையில் வாகனங்களில் அதிகபாரம் ஏற்றிச்செல்வதால் மின்கம்பிகளில் உரசி விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. வாகனங்களில் அதிக அளவு பாரங்களை ஏற்றிச்செல்வதால் பின்னால் செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனம் தெரியாமல் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
விபத்து அபாயம்
பொள்ளாச்சி தாராபுரம் மாநில நெடுஞ்சாலை என்பதால் அதிக அளவில் போக்குவரத்து உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் மக்காச்சோள தட்டுகளை அதிகளவில் வாகனங்களில் ஏற்றி வருவதால் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் இந்த வாகனங்களால் விபத்து ஏற்படும் நிலையும் உள்ளது.
எனவே காவல்துறையினர் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதிக பாரம்

எனவே காவல்துறையினர் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.