சுமை தூக்கும் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


சுமை தூக்கும் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

திருவிடைமருதூர் அருகே டாஸ்மாக் குடோன் முன்பு சுமை தூக்கும் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்;

டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இறக்கு கூலி மற்றும் சமமான ஏற்றுக்கூலி, குடிநீர் வசதி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருபுவனம் பேரூராட்சியில் உள்ள நாகை மாவட்ட டாஸ்மாக் குடோன் அருகே சி.ஐ.டி.யூ.. டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் சார்பில் ஆா்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினாா். மாவட்ட துணைத்தலைவர் ஜீவபாரதி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மொத்த விற்பனை கிடங்கின் சுமை தூக்கும் பணியாளர்கள் சங்க தலைவர் பிரபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story