லோடு ஆட்டோவில் தீவிபத்து


லோடு ஆட்டோவில் தீவிபத்து
x

நெல்லை தச்சநல்லூரில் லோடு ஆட்டோவில் தீவிபத்து ஏற்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் மங்களாகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). லோடு ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மாலையில் தாராபுரத்தில் உள்ள கோவிலில் பந்தல் அமைப்பதற்காக அதற்கான பொருட்களை லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றார். கோவில் அருகே லோடு ஆட்டோ நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் திடீரென லோடு ஆட்டோவின் முன்பகுதியில் கரும்புகை வெளிவந்தது. அடுத்த சில நிமிடங்களில் தீப்பற்றி எரிந்தது. இதனையடுத்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். விசாரணையில் அந்த லோடு ஆட்டோவில் இருந்த பேட்டரி தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story