800 கிலோ ரேஷன் அரிசியுடன் லோடு ஆட்டோ பறிமுதல்


800 கிலோ ரேஷன் அரிசியுடன் லோடு ஆட்டோ பறிமுதல்
x

வீரவநல்லூரில் 800 கிலோ ரேஷன் அரிசியுடன் லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பொட்டல் பகுதியில் இசக்கியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் 2 பேர் ஒரு லோடு ஆட்டோ அருகே சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டு இருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து போலீசார் அந்த லோடு ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 800 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அரிசி மற்றும் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற பொட்டல்புதூரை சோந்த செல்லதுரை, மயிலப்பபுரத்தை சேர்ந்த ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.


Next Story