நீராவி ஜெனரேட்டர்கள் ஏற்றி வந்த மிதவை கப்பல் தரை தட்டியது


நீராவி ஜெனரேட்டர்கள் ஏற்றி வந்த மிதவை கப்பல் தரை தட்டியது
x

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு நீராவி ஜெனரேட்டர்கள் ஏற்றி வந்த மிதவை கப்பல் தரை தட்டி நிற்கிறது. அதை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு நீராவி ஜெனரேட்டர்கள் ஏற்றி வந்த மிதவை கப்பல் தரை தட்டி நிற்கிறது. அதை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதில் 3, 4-ம் அணு உலைக்கான பணிகள் இறுதிக்கட்ட நிலையை அடைந்துள்ளது. 4, 5-ம் அணு உலைக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

மிதவை கப்பல்

இந்த அணு உலைகளில் பயன்படுத்தப்படும் 2 நீராவி ஜெனரேட்டர் எந்திரங்கள் ரஷியாவில் இருந்து கடல் மார்க்கமாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து மிதவை கப்பலில் 2 நீராவி ஜெனரேட்டர்களும் ஏற்றப்பட்டன. அதை இழுவை கப்பல் மூலம் இழுத்தபடி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள சிறிய துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்தபோது, திடீரென மிதவை கப்பலுக்கும், இழுவை கப்பலுக்கும் இடையேயான இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தரை தட்டி நிற்கிறது

இதனால் மிதவை கப்பல் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டு, அங்குள்ள பாறையில் தட்டியபடி நிற்கிறது. அதனை மீட்கும் பணியில் அணுமின் நிலைய ஊழியர்கள், தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிைடயே, கூடங்குளம் பகுதியில் கடலில் நீராவி ஜெனரேட்டர்கள் ஏற்றப்பட்ட மிதவை கப்பல் தரை தட்டி நிற்கம் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story