சுமை தூக்கும் தொழிலாளி தற்கொலை


சுமை தூக்கும் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 17 March 2023 12:30 AM IST (Updated: 17 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

அய்யலூர் அருகே சுமை தூக்கும் தொழிலாளி தற்ெகாலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

அய்யலூர் அருகே உள்ள கொன்னையம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 38). சுமை தூக்கும் தொழிலாளி. கடந்த சில ஆண்டுகளாக இவர், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் அவருக்கு வலி குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் கணேசனுக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த அவர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கணேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த கணேசனுக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story