தாட்கோ மூலம் 96 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி கடன் உதவி-கலெக்டர் அம்ரித் தகவல்


தாட்கோ மூலம் 96 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி கடன் உதவி-கலெக்டர் அம்ரித் தகவல்
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தாட்கோ மூலம் 96 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் அம்ரித்் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி

தாட்கோ மூலம் 96 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் அம்ரித்் தெரிவித்தார்.

சுய வேலைவாய்ப்பு திட்டம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் முகாம் ஊட்டியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி ேபசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கான சுழல்நிதி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவித் திட்டம், நிலம் மேம்படுத்துதல், மின் இணைப்பு வழங்கும் திட்டம், இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்டப்பட்டதாரிகளுக்கு தொழில் துவங்குவதற்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, பட்டயக்கணக்கர், செலவு கணக்கர், நிறுவுன செயலருக்கு நிதியுதவி என ஆதிதிராவிடர்களுக்காக பல்வேறு செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரூ.1 கோடி கடன்

அதன்படி 96 பயனாளிகளுக்கு ரூ.1.18 கோடி மதிப்பிலும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 47 பயனாளிகளுக்கு ரூ.79.96 லட்சம் மதிப்பிலும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் (கிளினிக்) 1 பயனாளிக்கு ரூ.2.25 லட்சம் மதிப்பிலும், மகளிர் சுய உதவிக்குழுக்கான சுழல்நிதி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவித் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 152 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடி மதிப்பில் மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இதில் தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story