மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.27½ கோடி கடன் உதவி


மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.27½ கோடி கடன் உதவி
x
தினத்தந்தி 30 Dec 2022 6:45 PM (Updated: 30 Dec 2022 5:19 PM)
t-max-icont-min-icon

செம்பனார்கோவிலில் நடந்த விழாவில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.27½ கோடி கடன் உதவியை கலெக்டர் லலிதா வழங்கினார்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

செம்பனார்கோவிலில் நடந்த விழாவில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.27½ கோடி கடன் உதவியை கலெக்டர் லலிதா வழங்கினார்.

கடன் உதவி வழங்கும் விழா

செம்பனார்கோவில் அண்ணா திருமண மண்டபத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, ஒன்றியக்குழு தலைவர்கள் நந்தினி ஸ்ரீதர், மகேந்திரன், கமலஜோதி தேவேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

மகளிர் திட்ட இயக்குனர் பழனி வரவேற்றார். விழாவில் கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.27.68 கோடி கடன் உதவி வழங்கினர்.

விழாவில்கலெக்டர் லலிதா பேசியதாவது:-

மகளிர் சுய உதவிக்குழுக்கள்

தமிழக முதல்-அமைச்சர் மகளிர் மேம்பாட்டிற்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த திட்டங்களில் ஒன்றாக மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 வட்டாரங்களில் 5857 மகளிர் சுயஉதவி குழுக்களும், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய நகராட்சிகள், குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய 4 பேரூராட்சிகள் உள்ளிட்ட 6 நகர்புற அமைப்புகளில் 735 அளவிலான மகளிர் சுயஉதவி குழுக்களும் என மொத்தம் 6,592 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

ரூ.27.68 கோடி

இந்த விழாவில் 652 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20.99 கோடியும், 16 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ 7.69 கோடியும் என மொத்தம் ரூ.27.68 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுயதொழில் தொடங்கி மகளிர் சுய உதவி குழுவினர் தங்களது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் பெறும் இந்த கடன் தொகை பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு கூறினார்.

இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல்மாலிக், ஒன்றிய குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story