சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி


சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி
x

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் மேகநாத ரெட்டி கூறினார்.

விருதுநகர்


சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் மேகநாத ரெட்டி கூறினார்.

தனிநபர் கடன்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

தனிநபர் கடன் திட்டங்களில் திட்டம் 1-ன் கீழ் கடனுதவி பெற ஆண்டு வருமான வரம்பு கிராமப்புறங்களில் ரூ.99 ஆயிரம் மற்றும் நகர்ப்புறங்களில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டியில் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

திருப்பி செலுத்த வேண்டிய காலம் 5 ஆண்டுகள், 60 தவணைகள் ஆகும். தனிநபர் கடன் திட்டம் 2-ன் கீழ் கடனுதவி பெற ஆண்டு வருமான வரம்பு கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் ரூ.8 லட்சம்வரை இருக்க வேண்டும். ஆண்களுக்கு 6 சதவீதமும், பெண்களுக்கு 5 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.

ஆவணங்கள்

கடன் தொகையை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டிய காலம் 5 ஆண்டுகளாகும். கடன் பெறுவதற்கு சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிட சான்று நகல், கடன் பெறுவதற்கான தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஆதார் அட்டை நகல், கூட்டுறவு வங்கி கூறும் இதர ஆவணங்கள், 3 பாஸ்போர்ட் புகைப்படம், கடன் விண்ணப்ப படிவங்கள் ஆகியவை ஆவணங்கள் ஆகும்.

கடன் பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களை விலை இல்லாமல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுக்கடன்சங்கங்களில் பெறலாம். மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட அலுவலகங்களையும், கூட்டுறவு வங்கிகளையும் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார்.


Next Story