மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவி
காவிரிப்பூம்பட்டினம் கூட்டுறவு சங்கத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது
மயிலாடுதுறை
திருவெண்காடு:
காவிரி பூம்பட்டினம் கூட்டுறவு சங்கத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர் ராஜேந்திரன் கலந்துகொண்டு ரூ. 6 லட்சத்திற்கான காசோலைகளை மகளிர் சுய உதவி குழுவினரிடம் வழங்கி பேசுகையில், மகளிர் சுய உதவி குழுவினர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெறுகின்ற கடன் தொகையை கொண்டு லாபம் தருகின்ற தொழில்களை தொடங்க வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை குழு உறுப்பினர்கள் பிரித்து கொள்ள வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் பெறுகின்ற கடனை கெடு தேதிக்குள் செலுத்த வேண்டும். விவசாயம், கால்நடை வளர்ப்பில் மகளிர் குழுவினர் அதிக அளவில் ஈடுபட வேண்டும் என்றார். இதில் கூட்டுறவு சங்க செயலாளர் சுப்பிரமணியன், காசாளர் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story