பல்வேறு திட்டங்களில் மானியத்துடன் கடன் உதவி


பல்வேறு திட்டங்களில் மானியத்துடன் கடன் உதவி
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்களில் மானியத்துடன் கடன் உதவிகள் வழங்கப்படும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்களில் மானியத்துடன் கடன் உதவிகள் வழங்கப்படும் என்று கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மானியத்துடன் கடன் உதவி

நாகை மாவட்டத்தில் தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்களில் மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நிலம் வாங்கும் திட்டம் (மகளிருக்கான திட்டம்), நிலம் மேம்பாடுதிட்டம் (இருபாலருக்கும்), தொழில் முனைவோர் திட்டம், கடன் உதவி வழங்கும் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான திட்டம், வேளாண் நிலமேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மானியத்துடன் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

திட்ட அறிக்கை

இந்த திட்டங்களில் பயன்பெற விரும்புபவர்கள் application.tahdco.com என்ற இணையதளமுகவரில் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்யும் போது, குடும்ப அட்டை எண் அல்லது இருப்பிடச்சான்று, சாதிச்சான்று, வருமானச்சான்று ஆகியவற்றின் எண் ஆகியற்றை பதிவு செய்ய வேண்டும்.வாகன கடன் பெற ஓட்டுனர் உரிமத்துடன் பேட்ஜ் பெற்றிருத்தல் வேண்டும்.

அதுபோல் திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதியையும் அதற்கான இடத்தில் குறிப்பிடவேண்டும். புகைப்படம் மற்றும் அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யவேண்டும். அரசின் திட்டங்கள் ஏழை.எளியோர் பயன் பெறும் வகையில் விரைவாக செயல்படுத்தப்படுகிறது.

ரூ.1 கோடியே 16 லட்சம்

நாகை மாவட்டத்தில், தாட்கோஅலுவலகம் மூலம் 2021-22-ம் ஆண்டில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 55 பயனாளிகளுக்கு ரூ.76 லட்சத்து 96 ஆயிரமும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 28 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 20 ஆயிரமும், மகளிர் சுய உதவிக்குழு பொருளாதார கடன் உதவி திட்டத்தின் கீழ் 4 குழுக்களுக்கு (48 நபர்கள்) ரூ.10 லட்சமும் என மொத்தம் 131 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 16 லட்சத்து 16 ஆயிரம் மானியத்துடன் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.


Next Story