12 பயனாளிகளுக்கு ரூ.78 லட்சம் மானியத்துடன் கடன் உதவி


12 பயனாளிகளுக்கு ரூ.78 லட்சம் மானியத்துடன் கடன் உதவி
x

தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.78 லட்சம் மானியத்துடன் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

திருவாரூர்


தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.78 லட்சம் மானியத்துடன் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் தொடங்க வைத்து, தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் வகையில் எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

தொழில் வணிகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் புதிய தொழில் முனைவோர்களை கண்டறிந்து அவர்களை ஆற்றல் மிக்க தொழில் முனைவோர்களாக உருவாக்கிட தொழில் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் அளித்து பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற செய்து வருகிறார்.

ரூ.78 லட்சத்து 16 ஆயிரம்

அதன் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 22 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 13 லட்சம் மானியம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 12 பயனாளிகளுக்கு ரூ.78 லட்சத்து 16 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 135 நபர்களுக்கு ரூ.3 கோடியே 90 லட்சம் மானியம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 66 நபர்களுக்கு ரூ.1 கோடியே 33 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 66 நபர்களுக்கு ரூ.54 லட்சம் மானியம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 78 பேருக்கு ரூ.79 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story