கால்நடை பராமரிப்பு கடன் வழங்கும் விழா


கால்நடை பராமரிப்பு கடன் வழங்கும் விழா
x

ஆயக்காரன்புலத்தில் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கும் விழா நடந்தது

நாகப்பட்டினம்

வாய்மேடு;

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கூட்டுறவு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கருப்பம்புலம் ஊராட்சி தலைவர் சுப்புராமன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்க செயலாளர் வாஞ்சிநாதன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கருப்பம்புலம் ஊராட்சியில் 50 நபர்களுக்கு 165 மாடுகள் வாங்க ரூ. 23 லட்சத்து 10 ஆயிரம் வட்டியில்லா கடனாக பால் உற்பத்தியாளர் சங்க பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.


Next Story