மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி-அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்


மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி-அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி-அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்

ராமநாதபுரம்

ராமநாதபுரம், டிச.30-

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

நலத்திட்ட உதவி

ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமநாதபுரம் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கினார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மீது கூடுதல் கவனம் செலுத்தி அவர்களின் நலனில் அக்கறை கொண்டு பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் ஆவின் பாலகம் அமைத்துக்கொள்ளவும், தெருவோர தள்ளுவண்டி கடை நடத்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. எனவே அரசு வழங்கும் திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பயிற்சி சப்-கலெக்டர் நாராயணசர்மா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடனுதவி

ராமநாதபுரத்தில் நேற்று மருத்துவத்துறை மூலம் 108 ஆம்புலன்சு சேவைக்கான இரண்டு வாகனங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், நவாஸ் கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையேற்று புதிய 2 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது, இந்த இரண்டு வாகனங்களிலும் அதிநவீன தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டு வடிவமைக்கப்பட்ட வாகனம் என்பதால் மிக பயனுள்ளதாக இருக்கும் என்றார். இதைத் தொடர்ந்து, மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத் துறையின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் 1351 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.74.16 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதுகுறித்து அவர் கூறும் போது, 2022-23-ம் வருடத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இலக்காக ரூ.500 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் நிகழ்வாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் இவ்விழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.74.16 கோடி, 1351 குழுக்களுக்கு வங்கி கடனாக வழங்கப்படுகிறது. இதில் கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) பிரவீன்குமார், மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், வக்கீல் ரவிச்சந்திர ராமவன்னி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story