உள்ளாட்சி துறை பணியாளர் சங்க கூட்டம்


உள்ளாட்சி துறை பணியாளர் சங்க கூட்டம்
x

நீடாமங்கலத்தில் உள்ளாட்சி துறை பணியாளர் சங்க கூட்டம் நடந்தது

திருவாரூர்

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் ஒன்றிய உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளன ஏ.ஐ.டி.யூ.சி. கூட்டம் ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. சங்க பொறுப்பாளர்கள் சரவணன், செல்வராஜ், வெங்கடேசன், கல்யாணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஊராட்சியில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் மாதந்தோறும் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கூடுதல் பணியாளர்களுக்கு பணிபதிவேடு தொடங்க வேண்டும். பணியாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் கையுறை போன்ற உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story