வட்டார குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்


வட்டார குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் வட்டார குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடியில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சிராணி, பழனிச்சாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பவானி, விஜயலதா, மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குழந்தைத் தொழிலாளர்கள் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு பணியாளர் செல்விபிளாரன்ஸ், ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் ஜெயாதுரைப்பாண்டியன், விரிவாக்க அலுவலர் கிறிஸ்டி விஜயராணி, மெஞ்ஞானபுரம் சுகாதாரஆய்வாளர் ரஞ்சித் மற்றும் வட்டார குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்..


Next Story