புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 10-ந் தேதி உள்ளூர் விடுமுறை..!
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 10-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்வான தேர்த்திருவிழா வருகிற 10-ந் தேதி நடக்கிறது.
இதையொட்டி அன்றைய தினம் (10-ந் தேதி) புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் அதற்கு பதிலாக 29-ந் தேதி (சனிக்கிழமை) பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று பணிநாள் ஆகும்.
மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினை கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும். மேலும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.