திருவண்ணாமலை சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்கள் கட்டணமின்றி சென்றுவர பா.ம.க. வலியுறுத்தல்


திருவண்ணாமலை சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்கள் கட்டணமின்றி சென்றுவர பா.ம.க. வலியுறுத்தல்
x

திருவண்ணாமலை சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்கள் கட்டணமின்றி சென்றுவர பா.ம.க. வலியுறுத்தி உள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் ஏந்தல் பெ.பக்தவச்சலம் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் பழனி, செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் வீரம்மாள், மாவட்ட துணை செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் நாராயணசாமி வரவேற்றார்.

கூட்டத்தில் இட ஒதுக்கீடு போராட்டங்களில் உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு முக்கிய இடங்களில் பதாகைகளை வைத்து மாலையிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவது என்றும், திருவண்ணாமலையில் நடைபெறும் மவுன அஞ்சலி ஊர்வலத்தில் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும்.

திருவண்ணாமலை இனாம்காரியந்தலில் திறக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியில் உள்ளூர் மக்களும், சுற்றுப்புற கிராம மக்களும் கட்டணமின்றி சென்றுவர மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் லோகநாதன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி, மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் பாலு, ஒன்றியக்குழு உறுப்பினர் சசிகலா ரவிசந்திரன், நகர செயலாளர்கள் பத்மநாபநாயுடு, உதயராகவன், ராஜசேகர், கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் லோகநாதன் நன்றி கூறினார்.


Next Story