பரமக்குடி நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு பூட்டு
பரமக்குடி நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு பூட்டு ேபாட்டு ஆணையாளர் நடவடிக்கை எடுத்தார்.
பரமக்குடி,
பரமக்குடி நகராட்சிக்கு பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் செலுத்த வேண்டிய குடிநீர் வரி, சொத்து வரி, கடை வாடகை உள்ளிட்ட வரி இனங்கள் பல கோடிக்கு மேல் நிலுவையாக உள்ளது. இதனால் நகராட்சி நிர்வாகம் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமலும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையிலும் திண்டாடுகிறது. இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் நடவடிக்கையின் கீழ் பரமக்குடி பஸ் நிலையம் பகுதியில் நகராட்சி கடையை நடத்தி வரும் ராஜா, பாலமுருகன், நாகலிங்கம் ஆகியோர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகையை பல மாதங்களாக செலுத்தாமல் இருந்துள்ளனர். உடனே அவர்களது கடைகளை இழுத்து பூட்டி சீல் வைத்தனர். பின்பு நாகலிங்கம் என்பவர் கடைக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராத தொகையை அவர் உடனே செலுத்தியதால் மீண்டும் அவர் கடையை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் நகராட்சி மேலாளர் தங்கராஜ், நகராட்சி வருவாய் ஆய்வாளர் முருகன் உள்பட அதிகாரிகள் இந்த நடவடிக்கை மேற்கொண்டனர்.