டயர் வெடித்ததில் சாலையோரம் கவிழ்ந்த லாரி
திருப்பூர்
திருப்பூர் பூங்கா நகர் பகுதியில் நேற்று காலை 10½ மணி அளவில் மண் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி சென்றது. திடீரென்று லாரியின் பின்சக்கர டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். பின்னர் பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு லாரியை தூக்கி நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். வீரபாண்டி பிரிவில் இருந்து கோவில்வழி செல்லும் சாலையில் இந்த விபத்து நடந்தது. விபத்து நடந்த நேரத்தில் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
Next Story