2 லாரிகள் நேருக்குநேர் மோதல்; டிரைவர் காயம்
புதுச்சேரியில் இருந்து பிளாஸ்டிக் துகள்கள் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று பல்லடம் நோக்கி கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கிலிருந்து மேற்காக வந்து கொண்டிருந்தது. இந்த லாரி பல்லடம் பனப்பாளையம் பகுதியில் வந்தபோது அங்குள்ள பெட்ரோல் பங்கில் இருந்து மற்றொரு லாரி வெளியே வந்தது. அப்போது இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் மோதியது. இதில் பிளாஸ்டிக் துகள்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியின் ஓட்டுனர் மனோகரன்(வயது 55) படுகாயம் அடைந்தார்.மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் காயம் அடைந்த பிளாஸ்டிக் லோடு லாரியின் ஓட்டுனர் மனோகரனை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் அந்த வழித்தடத்தில் பாதிப்படைந்த போக்குவரத்தையும் சீர் செய்தனர். இந்த விபத்தால் அந்தப் பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.