இருதரப்பு மோதலில் வீடு சூறை
ஒரத்தநாடு அருகே இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் வீடு சூறையாடப்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் வீடு சூறையாடப்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீடு அடித்து சூறை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மேலஉளூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அதே பகுதியை சேர்ந்த சித்ரா (வயது48), செந்தில் (44) ஆகியோர் தனித்தனியே கடை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சித்ராவிற்கும் -செந்திலுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பிறகு இந்த தகராறு இரு தரப்பினரிடையே மோதலாக வெடித்தது. இதில் சித்ராவின் வீடு அடித்து சூறையாடப்பட்டது.
4 பேர் படுகாயம்; 8 பேர் மீது வழக்கு
மேலும் இந்த தகராறில் படுகாயம் அடைந்த சித்ரா உள்ளிட்ட 3 பேர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியிலும், செந்தில் ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சித்ரா கொடுத்த புகாரின் பேரில் செந்தில் உள்பட 4 பேர் மீதும், செந்தில் கொடுத்த புகாரின் பேரில் சித்ரா உள்பட 4 பேர் மீதும் என 8 பேர் மீது ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.