அலவாய்ப்பட்டி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ருத்ராபிஷேக விழா
அலவாய்ப்பட்டி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ருத்ராபிஷேக விழா
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அடுத்த அலவாய்ப்பட்டி கிராமத்தில் உள்ள காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று ருத்ராபிஷேகம் விழா நடந்தது. காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹம், பஞ்சகவ்ய பூஜை, ருத்ரபாராயணம், ருத்ராபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மதியம் 12 மணிக்கு பூர்ணாகுதி, கலசாபிஷேகம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. ஸ்தல குருக்கள் சிவாச்சாரியார் பிரபு நாகேந்திரன் மற்றும் விக்னேஷ் தலைமையில் பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் சாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக பால், நெய், இளநீர் போன்றவற்றை கொண்டு வந்திருந்தனர். இதில் நடுப்பட்டி, மாட்டுவேலம்பட்டி, அத்தனூர், வெண்ணந்தூர், மின்னக்கல், செம்மாண்டப்பட்டி, ஓ.சவுதாபுரம் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.