தடை விதிக்கப்பட்ட இடத்தில் லாரிகள் நிறுத்தம்
மன்னார்குடியில் தடை விதிக்கப்பட்ட இடத்தில் லாரிகள் நிறுத்தப்பட்டதால் டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
திருவாரூர்
கோட்டூர்;
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் அரசு அனுமதி பெற்ற மணல் குவாரியில் இருந்து 6 லாரிகளில் மணல் ஏற்றப்பட்டது. லாரிகளில் ஏற்றப்பட்ட மணலை வெளியூருக்கு கொண்டு செல்வதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்னர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு லாரிகள் கொண்டு வரப்பட்டன. அந்த லாரிகள் மன்னார்குடி வ.உ.சி. சாலையில் பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்தன. தொடர்ந்து 4 நாட்களுக்கும் மேலாக தடை செய்யப்பட்ட இடத்தில் மணல் லாரிகள் நிறுத்தப்பட்டிருந்ததை அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து 6 லாரிகளின் டிரைவர்களுக்கு ரூ.500 வீதம் ரூ.3ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story