தொப்பூர் கணவாயில் சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது-டிரைவர்கள் காயம்
தர்மபுரி
நல்லம்பள்ளி:
ஐதராபாத்தில் இருந்து திருச்சி மாவட்டத்துக்கு இரும்பு மற்றும் தின்பண்டங்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 27) என்பவர் ஓட்டி வந்தார். உடன் டிரைவர் பிரசாத் (22) வந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே நேற்று அந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர்கள் மணிகண்டன், பிரசாத் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தொப்பூர் போலீசார் லாரியை மீட்டு, அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
Next Story