ஓசூரில் மண் கடத்திய 6 லாரிகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி
ஓசூர்:
ஓசூர் ஆவலப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் உமாதேவி மற்றும் அதிகாரிகள் சர்க்கார் ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கேட்பாரற்று நின்ற 4 லாரிகளை சோதனை செய்தபோது, அதில் அனுமதியின்றி 100 யூனிட் மண் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து உமாதேவி கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் அட்கோ போலீசார் 4 லாரிகளையும், பறிமுதல் செய்தனர். சேலம் கனிம வள பிரிவு உதவி புவியியலாளர் பிரியா தலைமையில் அதிகாரிகள் பூனப்பள்ளியில் ரோந்து சென்றனர். அங்கு சோதனைச்சாவடி அருகே மண் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். இதேபோல் தொடுதேப்பள்ளியில் மண் கடத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story