லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு
லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (வயது 40). லாரி டிரைவர். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து டிராக்டர் உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் சப்ளை செய்துள்ளார் அதில் கிடைத்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ராஜபாளையம்-சங்கரன்கோவில் சாலையில் லாரியை நிறுத்திவிட்டு டீக்குடிக்க சென்றார். அப்போது அங்கு வந்த திருநங்கைகள் அவரை திடீரென தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து ராம்குமார் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகளை வலைவீசி தேடி வருகின்றனர்.