ரெயிலில் அடிபட்டு லாரி டிரைவர் சாவு
தூத்துக்குடியில் ரெயிலில் அடிபட்டு லாரி டிரைவர் பரிதாபமாக பலியானார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி பெரியசாமி நகரை சேர்ந்தவர் சென்ராயபெருமாள். இவருடைய மகன் முருகன் (வயது 31). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். அவர் பெரியசாமிநகர் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்று உள்ளார். அப்போது வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து மீளவிட்டான் நோக்கி சென்ற ரெயில் மோதி அவர் பரிதாபமாக இறந்து உள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த முருகனுக்கு, முருகவள்ளி என்ற மனைவியும், காவியா என்ற மகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story