ஆற்றில் மூழ்கி லாரி டிரைவர் பலி
ஆற்றில் மூழ்கி லாரி டிரைவர் பலியானார்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியை அடுத்துள்ள மழையூர் அதிரான்விடுதி கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 45). லாரி டிரைவர். இவர் நேற்று புதுக்கோட்டையில் இருந்து கிரசர் ஜல்லியை லாரியில் கொண்டு வந்து ஒரத்தநாடு பகுதியில் இறக்கிவிட்டு மாலை 6 மணியளவில் திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது வெட்டிக்காட்டில் லாரியை நிறுத்திவிட்டு செல்லத்துரை கல்லணை கால்வாய் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென செல்லத்துரை நீரில் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது அவருக்கு உயிர் இல்லை. இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்லத்துரையின் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.