சாலை விபத்தில் லாரி டிரைவர் படுகாயம்
சாலை விபத்தில் லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார்.
கரூர்
கரூர் மாவட்டம், குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம் (வயது 46). லாரி டிரைவரான இவர், சம்பவத்தன்று லாரியை மாயனூரில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தி விட்டு ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வெங்கங்கல் பட்டியை சேர்ந்த சத்தியமூர்த்தி (42) என்பவர் ஓட்டி வந்த மற்றொரு லாரி எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த ஆபிரகாம் இருந்த லாரி மீது மோதியது. இதில் ஆபிரகாம் படுகாயம் அடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story