மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி


மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி
x

ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலியானார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே சின்னவரிகம் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (வயது 24), லாரி டிரைவர். இவர் நேற்று பெரியவரிகத்தில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலைக்கு லோடு ஏற்றி சென்றார். தொழிற்சாலையில் லாரியை நிறுத்திவிட்டு பின்புறத்தில் கட்டப்பட்டிருந்த தார்பாயை கழற்றினார். அப்போது தினகரனின் கை, லாரியின் மேல் புறத்தில் சென்ற மின்ஒயர் மீது உரசியது. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்பூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் விரைந்து சென்று தினகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story