மோட்டார் சைக்கிள் மோதி லாரி டிரைவர் பலி


மோட்டார் சைக்கிள் மோதி லாரி டிரைவர் பலி
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிள் மோதி லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிள் மோதி லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

லாரி டிரைவர்

மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு கோட்டகம் பகுதியைச் சேர்ந்தவர் தாம்சன் (வயது 66), லாரி டிரைவர். இவர் நேற்று அதிகாலையில் திருவனந்தபுரத்தில் இருந்து பழைய இரும்பு பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

களியக்காவிளை அருகே உள்ள ஒற்றாமரம் பகுதியில் வந்த போது டீ குடிப்பதற்காக லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு தாம்சன் சாலையை கடக்க முயன்றார்.

மோட்டார் சைக்கிள் மோதியது

அப்போது நித்திரவிளை ஆற்றுப்புறம் பகுதியைச் சேர்ந்த ராஜா செல்வகுமார் மகன் ராகுல் (21) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் தாம்சன் மீது மோதியது. இதில் தாம்சன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் ராகுலின் பின்னால் அமர்ந்து வந்த சஜித் ஆனந்த் படுகாயமடைந்தார்.

இதுபற்றி களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தாம்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சஜித் ஆனந்தை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச் ைசக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாம்சனின் மனைவி புஷ்பலீலா கொடுத்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story