சாலை விபத்தில் சிக்கி லாரி டிரைவர் பலி


சாலை விபத்தில் சிக்கி லாரி டிரைவர் பலி
x

சாலை விபத்தில் சிக்கி லாரி டிரைவர் பலியானார்.

கரூர்

நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகே உள்ள பூசாரிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 46). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு ஈரோடு -கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் நொய்யல் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சாலையோரமாக லாரியை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி அதிவேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சசிகுமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த சசிகுமார் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சசிகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சசிகுமாரின் மனைவி மோகனாம்பாள் (40) கொடுத்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story