கார் மீது லாரி மோதியது 4 பேர் காயம்
நீடாமங்கலம் அருகே கார் மீது லாரி மோதியதில் 4 பேர் காயமடைந்தனர். லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
நீடாமங்கலம்;
தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் மேகலாநகரைச் சேர்ந்தவர் மகாலெட்சுமி (வயது35). இவர் தனது கணவர் சிவக்குமார் (35), மகன் கவின் (13), மகள் சத்தியஸ்ரீ (10) ஆகியோருடன் கோட்டைப்பட்டணத்தில் உள்ள தனது உறவினரை பார்க்க நீடாமங்கலம் வழியாக நேற்று மதியம் காரில் சென்று கொண்டிருந்தனர். மன்னார்குடி சாலையில் பூவனூர் சருக்கை தெரு அருகில் இவர்கள் சென்ற போது மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் நோக்கி வேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. இதில் கார் பலத்த சேதமடைந்தது. காரில் பயணம் செய்த 4 பேரும் படுகாயமடைந்தனர். லாரியும் முன்பக்கம் சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். காயமடைந்த 4 பேரும் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்த லாரி் டிரைவர் ராஜப்பையன்சாவடியை சேர்ந்த வீரராகவனை(34) கைது செய்து விசாரணைநடத்தி வருகிறார்கள்.