மணல் லாரி மோதி பெண் பலி
திருவையாறு அருகே மணல் லாரி மோதி பெண் பலியானார். டிரைவர் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
திருவையாறு;
திருவையாறு அருகே மணல் லாரி மோதி பெண் பலியானார். டிரைவர் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
கடையில் லாரி மோதியது
தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த மருவூரில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் இருந்து நேற்று காலை பட்டுக்கோட்டை பள்ளிக்கொண்டானை சேர்ந்த டிரைவர் வீரமணி(வயது 48), டிப்பர் லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு திருவையாறு வழியாக தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தார்.திருவையாறை அடுத்த நடுக்கடை மெயின்ரோட்டில் லாரி சென்ற போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டயர் விற்பனை செய்யும் கடையில் மோதி அருகே நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி நின்றது.
6 பேர் படுகாயம்
இதில் கடையோரம் நின்று கொண்டிருந்த நடுக்கடையை சேர்ந்த மீராமைதீன்(50), முகமதுபந்தரை சேர்ந்த முகமதுரபீக்(48), ஹத்திஜா நகரை சேர்ந்த சாகுல்ஹமீது(45), ஈச்சங்குடியை சேர்ந்த செல்வம்(38), நடுக்கடையை சேர்ந்த அப்துல்மஜீத் மனைவி ரஜியாபேகம்(40), லாரி டிரைவர் வீரமணி ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீசார். சம்பவ இடத்துக்கு சென்று 6 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னா் அவர்கள் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற்றனர்.
பெண் பலி
இந்த நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரஜியாபேகம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இந்த பகுதியில் நடந்த விபத்து காரணமாக திருவையாறு- தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
----------
(பாக்ஸ்)
லாரிக்குள் சிக்கிக்கொண்ட டிரைவர்
விபத்தில் லாரியின் முன்பகுதி சேதம் அடைந்ததால் டிரைவர் வீரமணி லாரியின் உள்ளே காயங்களுடன் சிக்கிக்கொண்டார். இதனால் சம்பவ இடத்துக்கு பொக்லின் எந்திரம் வரவழைக்கப்பட்டு லாரியை உடைத்து டிரைவரை மீ்ட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வத்தனர்.