லாரியில் அடிபட்டு வாலிபர் உடல் நசுங்கி சாவு
தஞ்சையில், மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர், லாரியில் அடிபட்டு உடல் நசுங்கி பலியானார்.
தஞ்சாவூர்;
தஞ்சையில், மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர், லாரியில் அடிபட்டு உடல் நசுங்கி பலியானார்.
பெட்ரோல் பங்க் ஊழியர்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மேக்கிரிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கர்ணகொடி. இவருடைய மகன் பாக்கியராஜ்(வயது 35). இவர், தஞ்சையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலைபார்த்து வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் புதிய பஸ் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்தார்.அப்போது தஞ்சையில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது பாக்கியராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பக்க டயரில் சிக்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பாக்கியராஜ் பரிதாபமாக இறந்தார்.
போலீஸ் விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை நகர போக்குவரத்து குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான பாக்கியராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.