கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்


கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கனிம வள உதவி இயக்குனர் அஸ்வினி மற்றும் அதிகாரிகள் மூங்கில்புதூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்தனர். அதில் கிரானைட் கல் அனுமதியின்றி எடுத்து வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அதிகாரி அஸ்வினி கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story