அனுமதி சீட்டு இல்லாமல் ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்ற லாரி பறிமுதல்


அனுமதி சீட்டு இல்லாமல் ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்ற லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 9 Feb 2023 1:00 AM IST (Updated: 9 Feb 2023 11:48 AM IST)
t-max-icont-min-icon

அனுமதி சீட்டு இல்லாமல் ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு லாரிகள் மூலம் எம்-சாண்ட், கற்கள் உள்ளிட்ட கனிமவளங்கள் அனுமதி சீட்டு இல்லாமல் கொண்டு செல்வதாக மாவட்ட உதவி புவியியலாளர் பாண்டியராஜனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கம்பம்மெட்டு மலைப்பாதையில் புவியியலாளர் பாண்டியராஜன், வருவாய்த்துறை அலுவலர்களுடன் சேர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

அப்போது அவ்வழியாக ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரியை மறித்து அவர்கள் சோதனையிட்டனர். அப்போது அனுமதி சீட்டு இல்லாமல் ஜல்லிக்கற்கள் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து லாரியின் டிரைவரிடம் விசாரணை நடத்த முயன்றபோது, அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதைத்தொடர்ந்து லாரியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் மற்றும் லாரி உரிமையாளரான அனுமந்தன்பட்டியை சேர்ந்த தினகரன் ஆகிய 2 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Related Tags :
Next Story