22 டன் ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல்


பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே 22 டன் ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

அணைக்கட்டு

பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே 22 டன் ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

லாரியில் பிளாஸ்டிக் மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து லாரியில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தியதில், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் கழிக்குளம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (வயது 26), காஞ்சீபுரம் மாவட்டம் ராயல்குட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ் (41) என்பதும், காஞ்சீபுரத்தில் இருந்து கர்நாடக மாநிலம் தும்கூருக்கு 22 டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.



Next Story