கனிம வளம் கடத்த முயன்ற லாரி பறிமுதல்
கேரளாவுக்கு கனிம வளம் கடத்த முயன்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி
கொல்லங்கோடு:
கேரளாவுக்கு கனிம வளம் கடத்த முயன்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
விளவங்கோடு தனிப்பிரிவு தாசில்தார் தினேஷ்சந்திரன் (வயது45) தலைமையிலான அதிகாரிகள் நேற்று மதியம் ஊரம்பு பகுதியில் கனிமவள கடத்தலை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் கொல்லங்கோடு செல்வதற்கான அனுமதியுடன் கேரளாவுக்கு கனிம வளங்களை கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த லாரியை பறிமுதல் செய்து லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story